/* */

வாடிப்பட்டி குலசேகரன் கோட்டை மீனாட்சி திருக்கல்யாணம்

வாடிப்பட்டி குலசேகரன் கோட்டை மீனாட்சி திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

வாடிப்பட்டி குலசேகரன் கோட்டை மீனாட்சி திருக்கல்யாணம்
X

வாடிப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில், திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா, கடந்த 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாள் இரவும் காமாட்சி, ராஜராஜேஸ்வரி, மூகாம்பிகை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். நேற்று புதன்கிழமை திக்விஜயம் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு மேளதாளங்களுடன் வாத்தியம் முழங்க ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்றது. மேலும் விழாவில் கலந்து கொண்ட 1000 க்கு மேற்பட்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு மற்றும் ஏராளமான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று இரவு ஊஞ்சல் ஆட்டமும் நாளை வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் செய்துள்ளனர். விழாவில் 300 க்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 14 April 2022 7:30 AM GMT

Related News