மதுரை பரவை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள்
பரவை அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு ரூ.1.5லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே பரவை சத்தியமூர்த்தி நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரவை ஜி.எச்.சி.எல்., சமூக அறக்கட்டளை சார்பாக ரூ.1.5லட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை தாங்கிய பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை மாவட்ட துணைஇயக்குநர் டாக்டர் குமரகுருபரனிடம் அறக்கட்டளை முதன்மைசெயல்அலுவலர் பாலகிருஷ்ணன் அறுவைசிகிச்சைஉபகரணங்கள், குளிர்பதனபெட்டி, டெங்குபுகைமருந்து தெளிப்பான்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார். அதைபெற்றுக்கொண்டு, மாவட்டதுணைஇயக்குநர் குமரகுருபரன் பேசியதாவது:-
பரவை ஜி.எச்.சி.எல்.,சமூக அறக்கட்டளை இதுவரை மருத்துவமுகாம்கள், விழிப்புணர்வுபிரச்சாரங்கள், கருத்தரங்குகள், கல்விமேம்பாட்டுபணிகள், நலந்தோர் ஏழை, எளியோருக்கு நலத்திட்டஉதவிகள் என்று எண்ணில்லா சமூகபணிகள் தொடர்ந்துசெய்து வருகிறது.
அந்த வரிசையில் சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரில்,உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு தற்போது ரூ.1.5லட்சம் மதிப்பீட்டில் அறுவைசிகிச்சைக்கு தேவையான உபகரணங்களும், குளிர்பதனபெட்டியும், தற்போது, பருவமழை தொடங்குவதையொட்டி, டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதத்தில் கொசுமருந்து அடிப்படிதற்கு மருந்துதெளிப்பான்கருவிகள் என்று வழங்கியுள்ளது. இந்த சமூகபணியால், கிராமபொதுமக்களுக்கு பெரும் பயனடைவார்கள் இதுபோன்று சமூகஅக்கறையோடு உதவும் எண்ணத்தை தூண்டும்விதமாக மேலும், பல உதவிகள் செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், வட்டார சுகாதர மருத்துவ அலுவலர் வரலெட்சுமி,வட்டாரசுகாதார மேற்பார்வையாளர் செல்லையா, உதவிமருத்துவர் அருணா, துணைபொதுமேலாளர் அசோக்குமார், சமூகபொறுப்புஅலுவலர் சுஜின்தர்மராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu