சோழவந்தான் அரிமா சங்கம் சார்பில் மருத்துவ முகாம்

சோழவந்தான் அரிமா சங்கம் சார்பில் மருத்துவ முகாம்
X

சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

சோழவந்தான் நகர அரிமா சங்கம் , மருத்துவர் வேலு மற்றும் ரிதம் கிளினிக் இணைந்து மருத்துவ முகாமை சனிக்கிழமை நடத்தினர்

சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில், மருத்துவர் வேலு மற்றும் ரிதம் கிளினிக் இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

அரிமா சங்கத்தலைவர் தொழிலதிபர் டாக்டர் எம்.வி.எம்.வி.எம்.மருது பாண்டியன் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமில், இதய ஸ்கேன், சர்க்கரை நோய் பரிசோதனை, இசிஜி, கொழுப்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.மேலும், மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவர் பேரூராட்சி கவுன்சிலர் டாக்டர் எம்.வி.எம். மருது பாண்டியன் தலைமை வகித்தார். அரிமா சங்க முன்னாள் ஆளுநர் செல்லப்பாண்டியன், மருத்துவர் வடிவேலு மற்றும் வேலு ஹார்ட் அண்ட் ரிதம் கிளினிக் முன்னிலை வகித்தனர். சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன், முகாமை துவக்கி வைத்தார். சோழவந்தான் நகர மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இதில் ,அரிமா சங்க நிர்வாகிகள் செயலாளர் பிச்சைமணி பொருளாளர் காந்தன்‌‌உள்ளிட்ட‌ நிர்வாகிகள் மற்றும் சோழவந்தான் அரிமா சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ‌பலர்‌கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!