அலங்காநல்லூர் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

அலங்காநல்லூர் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
X

அலங்காநல்லூரில் வட்டார அளவிலான சுகாதார திருவிழாவை முன்னிட்டு கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது

இந்த மருத்துவ முகாமில் ,தாய் சேய் நலம், தடுப்பூசி செலுத்துதல், நீரிழிவு நோய், கண் பரிசோதனை உள்ளிட்ட பல சோதனைகள் செய்தனர்

அலங்காநல்லூரில் வட்டார அளவிலான சுகாதார திருவிழாவை முன்னிட்டு கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

cதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தனியார் பள்ளி வளாகத்தில், வட்டார அளவிலான சுகாதார திருவிழா,கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பஞ்சு தலைமை வகித்து தொடக்கி வைத்தார். துணை இயக்குனர் மருத்துவர் செந்தில் குமார், வட்டார மருத்துவ அலுவலர் சந்துரு, மாவட்ட நல கல்வியாளர் முத்துவேல், துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவர்கள், ஹமிதா பீமா, மீனாட்சி சுந்தரம், பூபேஷ் குமார், சித்த மருத்துவர்கள் கீதாஞ்சலி, தங்கப்பாண்டியன். இந்த மருத்துவ முகாமில் ,தாய் சேய் நலம், தடுப்பூசி செலுத்துதல், நீரிழிவு நோய், கண் பரிசோதனை, காது-மூக்கு-தொண்டை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு கர்ப்பிணி பெண்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் ,சுகாதார ஆய்வாளர்கள் சுப்ரமணி, ராஜசேகர், முருகன், இனிய குமார், சுகாதார செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture