அலங்காநல்லூர் அருகே ,மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை விழா!

அலங்காநல்லூர் அருகே ,மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை விழா!
X
அலங்காநல்லூர் அருகே ,மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றது.

காந்திகிராமம் கிராமத்தில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் 48வது நாள் மண்டல பூஜை விழா

அலங்காநல்லூர்.செப். 23-

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் காந்திகிராமம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் 48வது நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் யாக வேள்விகள் தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ராமேஸ்வரம், அழகர்கோவில், உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் யாகசாலையை சுற்றி வந்து வேத மந்திரங்கள் முழங்க கருடன் வானத்தில் வட்டமிட கோவில் கருவறையில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு 48வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகை தந்த சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை மலர்களும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காந்திகிராமம் தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்..

Tags

Next Story
ai in future agriculture