disappearing of foraging nature-மலைப்பகுதிகளில், குரங்குகளுக்கு உணவளிக்கும் தொழிலாளிக்கு பாராட்டு

குரங்குக்கு உணவு வழங்கும் ஆனந்தன்.
man feeding food to monkeys on the hillside news in tamil, Madurai news today, disappearing of foraging nature
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் , கொடைரோட்டைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் சிறு வயது முதல் வனப் பகுதியில் உணவின்றி, சுற்றித் திரியும் குரங்குகளுக்கு தன்னால் முயன்ற அளவு உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறிகள் மற்றும் சாப்பாடு போன்ற உணவுப் பொருள்களை வழங்கி வருகிறார்.
குறிப்பாக, பாலமேடு அருகே சாத்தையாறு அணை அழகர் கோவில் மலைப்பகுதி, நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களுக்குச் செல்லும்போது, அங்கு உணவுக்காக சுற்றித் திரியும் குரங்குகளுக்கு தனது வருமானத்தின் ஒரு பகுதியில் பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கி வழங்கி வருகிறார்.
இது குறித்து, ஆனந்தன் கூறுகையில் :
எனது சொந்த ஊர் கொடை ரோடு ஆகும். நான் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும்போது, அங்கு தண்ணீர் மற்றும் உணவுக்காக குரங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்து சாலையோரங்களில் உணவு கிடைக்குமா என்று பார்த்து இருப்பதை பார்க்கும் போது மிகுந்த மனவேதனை அடைவேன்.
இதனால் ,எனது வருமானத்தில் ஒரு பகுதியை இது போன்ற குரங்குகளுக்காக செலவு செய்ய முடிவு செய்து, அதன்படி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குரங்குகளுக்கு உணவளித்து வருகிறேன்.
இந்த வகையில் இன்று பாலமேடு அருகே உள்ள சாத்தையார் அணை பகுதிக்கு வந்தபோது சுமார் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் கோடை வெப்பம் தாங்காமல் தண்ணீர் மற்றும் உணவுக்காக சாலை ஓரங்களில் இருப்பதை கண்டு உடனடியாக ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பழங்களை சாக்குப்பையில் வாங்கி வந்து சாலை ஓரங்களில் வைத்து குரங்குகளுக்கு வழங்கினேன்.
முதலில் ஒரு குரங்கிற்கு பழத்தை வழங்கியதை பார்த்த மற்ற குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து பழங்களை வாங்கிச் சென்றன. அப்படி செய்தது, என் மனசுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தந்தது. ஆகையால், இது போன்று மற்றவர்களும் தங்களின் வருமானத்தின் ஒரு பகுதியை இது போன்று வனப்பகுதிகளில் உணவுக்காக ஏங்கும் விலங்கினங்களுக்கு வழங்கி உதவ வேண்டும் இவ்வாறு கூறினார்.
குறிப்பு :
இவர் செய்வது பாராட்டுக்குரியது தான் என்றாலும்,வன விலங்குகளுக்கு இப்படி நாம் உணவு வழங்கினால் காலப்போக்கில் அவைகள் உணவு தேடுவதையே மறந்துவிடும். அதனால், குரங்குகளின் அடுத்த தலைமுறை சாலையில் போவோர் வருவோரை உணவு தருவார்கள் என்று பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்படும். அப்படி தொடர்ந்தால் குரங்கினமே அழியும் நிலைகூட வரலாம். அதனால், அவைகள் வனத்தில் ஓடி ஆடி உணவு தேட நாம் வழிவகை செய்யவேண்டும். அதற்கு ஒரே வழி நாம் உணவுகளை வழங்கக்கூடாது. இந்த கருத்து வனவிலங்குகளை காப்பாற்றும் ஒரே நோக்கில் கூறப்படுவதாகும். வனத்துறையினர் இதை தடை செய்வது அவசியம் ஆகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu