மதுரை அருகே மாலைப்பட்டி மஹா சக்தி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

மதுரை அருகே மாலைப்பட்டி மஹா சக்தி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
X

கோவில் கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.

மதுரை அருகே மாலைப்பட்டி மஹா சக்தி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஒன்றியம் சத்திரப்பட்டி அருகே உள்ள மாலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. கோவில் கலசங்கள் மீதுபுனித நீரினை சிவாச்சாரியார்கள், ஊற்றினார்கள். முன்னதாக, கோயில் முன்பாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!