மதுரையில் மஹாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்பணம் குவிந்த பக்தர்கள்!
மதுரை மாவட்டத்தில் மஹாளயா அமாவாசை முன்னிட்டு, கோயில் மற்றும் ஆற்றங்கரையில் சிறப்பு தர்ப்பணம் செய்து பிதுர்களை வழிபட்டனர்.
மதுரை அண்ணா நகர் யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயம், மதுரை மேலமடை சௌபாக்கிய விநாயகர் ஆலயம், மதுரை அண்ணா நகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயக ஆலயம் மற்றும் கோரிப்பாளையம் அருகே வைகை ஆற்றங்கரையில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
ஆடி ,தை மற்றும் புரட்டாசி அமாவாசையில் பக்தர்கள் முன்னோர்களுக்கு சிறப்பு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதன்படி, மதுரையில் முன்னோர்களுக்கு இன்று காலை தர்ப்பணம் செய்தனர்.
சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் மகளாய அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்:
புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு, சோழவந்தான் அருகே திருவேடகம் வைகையில் முன்னோர்களின் நினைவாக பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
புரட்டாசி அமாவாசை, ஆடி அம்மாவாசை,தை அமாவாசை ஆகிய தினங்களில் கடலில் அல்லது நீர் நிலைகளில் நீராடி வேத விற்பனர்கள் மூலம் எள், அரிசி போன்றவற்றை தர்ப்பணம் செய்து பலிகர்மத்தில் ஈடுபட்டால் இறந்த மூதாதையர்களின் ஆன்மா சாந்தி பெறும்.குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடைவார்கள் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே உள்ளது.
அந்தவகையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகையில் தங்கள் முன்னோர்கள் நினைவாக பூஜைகள் செய்து புனித நீராடுவதற்காக அதிகாலையிலே நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர், இங்குள்ள போத்திகள் மற்றும் விற்பனர்கள் மந்திரம் ஓத எள், பச்சரிசி, தர்பை புல், பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.
இது போன்று இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களுடைய ஆன்மா நற்கதி அடைந்து, தங்களுக்கு சகல ஐஸ்வரியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதைத்தொடர்ந்துஇங்குள்ள அருள்மிகு ஏடகநாதர் ஏழவார்குழலிசிவன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் சோழவந்தான் வைகை ஆற்றில் திருவேடகம் அருகே சாய் பாபா கோவில் அருகில் வைகை ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu