கணவாய் கருப்பணசாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்!

கணவாய் கருப்பணசாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்!
X

மேலக்கால், கணவாய் கருப்பசாமி ஆலய மகா கும்பாபிஷேகத்தை யொட்டி,   நடந்த பூஜை.

மேலக்கால், கணவாய் கருப்பணசாமி ஆலய, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கணவாய் கருப்பண்ணசாமி ஆலய மகா கும்பாபிஷேகம்:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, மேலக்கால் ஸ்ரீமலையாண்டி ஐய்யனார் ஸ்ரீகணவாய் கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் மேலக் கால் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மலையாண்டி அய்யனார் ஸ்ரீகணவாய் கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை நடைபெறுகிறது. இதற்காக யாக கேள்வி பூஜை நேற்று காலை 5 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் தொடங்கி தொடர்ந்து கணபதி பூஜை, கோ பூஜை நடைபெற்று மகா பூர்ணகக்ஷதியுடன் நேற்றைய யாகம் நடைபெற்றது.

இன்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. மாலை மூன்றாம் காலயாக பூஜைகள் நடைபெற்று நாளை காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, கோவில் மண்டபத்தில் அன்னதானம் நடைபெறும்.

இதில், மேலக்கால், பன்னியான் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர் . ஏற்பாடுகளை, கோவில் பங்காளிகள் மற்றும் கிராமத்தினர் செய்துள்ளனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு