நெடுங்குளம் அருள்மிகு விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்

நெடுங்குளம் அருள்மிகு விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்
X

நெடுங்குளம் விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீநீதி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் நடந்தது

சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீநீதி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் ,சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நீதி விநாயகர் கும்பாபிஷேகம் நடைபெற்றது‌. விழாவையொட்டி நேற்று அதிகாலை நான்கு மணி அளவில் பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி பூஜை உடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. நேற்று மாலை முதலாம் கால யாக பூஜைகளை, கோபாலகிருஷ்ணன் மற்றும் சிவாச்சாரியார்கள் தலைமையில் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து, இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் இரண்டாம் காலயாக பூஜை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

கோ பூஜை ,நாடி சந்தானம் தொடர்ந்து மகாபூர்ணாஹூதி நிறைவுற்று கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, கருப்பண்ணசாமி, தட்சிணாமூர்த்தி, மீனாட்சி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பால், தயிர் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ,அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் மற்றும் நெடுங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story