வாடிப்பட்டி அருகே அண்ணாமலையார் கோவில் சாமி சிலைகள் திருட்டு!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கொட்டமடக்கிகண்மாய்கரையில்லிங்க வடிவிலான அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர், காலபைரவர், புத்தர், வள்ளலார், சாய்பாபா, லிங்கம், அம்மன் என்றும் திசைக்கு 8 வகையான லிங்கங்கள் கற்சிலை மூலவர்களாக உள்ளன.
இதில் லிங்கத்திற்குள் குகைவறையில் 18 சித்தர்களும் அருள்பாலித்துவருகின்றனர். அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் ஆகிய சிலைகள் ஐம்பொன்னால் செய்யப்பட்டு உற்சவராக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவில் நிர்வாகி கோபிநாத் பூஜைகளை முடித்து கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். கோவில் உள்புறம் உள்ள திருமண மண்டபத்தில் காவல்பணி செய்யும் ராமையன்பட்டியை சேர்ந்த திருவேங்கடம் அங்கு தங்கியிருந்தார்.
நள்ளிரவு மர்ம மனிதர்கள் உள்ளே நுழைந்து கோவில் பூட்டை உடைத்து 3 அடி உயரமுள்ள நடராஜர் சிலை 1அடி உயர நடராஜர் சிலை ஒன்றரை அடி உயரமுள்ள சிவகாமி சிலை ஒன்றரை அடி உயரமுள்ள மாணிக்கவாசகர் சிலை ஆகிய ஐம்பொன் பித்தளையால் செய்யப்பட்ட உற்சவர் சிலைகளை திருடி சென்றுள்ளனர்.
3 மணிக்கு காவலர் திருவேங்கடம் எழுந்து வந்து கோவிலை சுற்றிபார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு சிலைகள் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்து கோவில் நிர்வாகி கோபிநாத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்மதிப்பு ரூ.80 ஆயிரமாகும்.
இது சம்மந்தமாக தகவலறிந்த வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ல்வியா ஜாஸ்மின், சப்இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு சி.சி.டி.விகேமிராவில் திருடுசம்பவ காட்சிகளை வைத்து வழக்குபதிவுசெய்து விசாரித்து மர்மமனிதர்களை வலைவீசி தேடிவருகிறார். மேலும் தடய அறிவியல் நிபுநர்கள் கைரேகைகளை பதிவுசெய்தனர். இந்த திருட்டுசம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu