பழுதான தென்னை மரங்களால் குடிசை வாழ் மக்களுக்கு சிரமம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் இந்து அறநிலைய ஆட்சித் துறைக்கு சொந்தமான, ஜெனக நாராயணபெருமாள் கோவில் வளாகத்தில் தென்னை மரங்கள் உள்பட இங்குள்ள மரங்கள் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த மரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழைக்கு பழுது அடைந்து பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் கூரை மேல் விழுந்தது.
இதில், அந்தப் பகுதியில் குடியிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், கூரையின் மேல் பகுதியில் மின்சார வயர்கள் செல்வதால், மரங்கள் மின்சார வயர் மீது விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து, இப் பகுதியில் உள்ள பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து, கோவில் நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பொது மக்கள் இப்பகுதியில் அச்சத்தில் நடமாடுகிறார்கள். கோவில் வளாகத்தில் உள்ள பட்டுப்போன தென்னை மரங்கள் முறிந்து விழுந்தால், அருகில் செல்லக் கூடிய உயர் அழுத்த மின் வயர் மீது விழுந்து ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் உள்ளது. இது மட்டுமல்லாது, அந்த தெருவில் நடந்து செல்லக்கூடிய பொதுமக்கள் மீது மரம் விழுந்து ஆபத்து விளைவிக்கக்கூடிய நிலையில் உள்ளதாக இப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஆகையால், கோவில் நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து ஆபத்தான பட்டுப்போன தென்னை மரங்களை அகற்ற வேண்டும் என்று கூறுகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் நாராயணன் கூறும்போது, எங்கள் தெருவில் வசிக்கக்கூடிய மக்கள் மற்றும் இந்த தெருவில் நடக்கக் கூடிய பொது மக்களும் இந்த பட்டுப்போன தென்னை மரங்கள் குறித்து ஜனக நாராயணப்பெருமாள் கோவில் செயல் அலுவலரிடம், பட்டுப்போன தென்னை மரங்களை அப்புறப்படுத்த புகார் மனு கொடுத்துள்ளோம். எந்தவித நடவடிக்கை எடுக்காததால், இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவில் அலுவலகத்துக்குச் சென்று நேரடியாக செயல் அலுவலரிடம் தெரிவித்தும், கோவில் நிர்வாகம் இதை பற்றி கண்டுகொள்ளவில்லையாம். ஆகையால், பட்டுப்போன தென்னை மரங்களால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளுக்கு கோவில் நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu