மதுரை சோழவந்தான்-மாரியம்மன் கொடை விழா கொடியேற்றம்

மதுரை சோழவந்தான்-மாரியம்மன் கொடை விழா கொடியேற்றம்
X
மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் திருவிழா இன்று தொடக்கம்.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது .

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மதுரை மாவட்டத்தில் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோயிலில், வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இதற்கு முன்னதாக , வைகாசி அமாவாசை பின்னர் வரும் திங்கட்கிழமை மூன்று மாத கொடியேற்றம் நடைபெறும்.

இதேபோல் , இந்த ஆண்டு கடந்த பங்குனி மாத அமாவாசைக்குப் பின்னர், திங்கட்கிழமையன்று மூன்று மாத கொடியேற்று விழா நடந்தது. எப்பொழுதும் போல் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை இன்று இரவு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக கட்டுப்பாடு உடன் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் அரசு உத்தரவுப்படி கோவில் வளாகத்தில் திருவிழா நடைபெறுவதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனுமதியில்லாமல் திருவிழா நடைபெறுகிறது. பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறு கோவில், செயல் அலுவலர் இளமதி மற்றும் கோவில் பணியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil