பலத்தமழையால் சோழவந்தான் பகுதியில் சுமார் 100 ஏக்கர் நெல், வாழை பயிர்கள் சேதம்

பலத்தமழையால் சுமார் 100 ஏக்கர் நெல், வாழை பயிர்கள் சேதம்

பலத்தமழையால் மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல் மற்றும் வாழைப்பயிர்கள் சேதமடைந்தன. இப்பகுதி விவசாயிகள் நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்

மதுரை மாவட்டம், சமயநல்லூர், சோழவந்தான், ரிஷபம், தேனூர், தோடனரி, கள்ளிக்குடி, இரும்பாடி உள்பட்ட பகுதிகளில் இரவு இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால், இப்பகுதியில் உள்ள சுமார் 10 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட நெல், வாழை பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

இதேபோல், அபிவிருத்தி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இந்த மழையால் தண்ணீர் தேங்கி உள்ளது இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இது குறித்து தேனூர் விவசாயி சுரேஷ் கூறியதாவது: சுமார் 10 ஏக்கர் நிலத்தில் இந்த கனமழையால் தண்ணீர் சூழ்ந்து விளைந்த நெற்கதிர்கள் நீரில் சாய்ந்துள்ளது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

ரிஷபம் பழனியப்பன் கூறியதாவது: எனது தோட்டத்தில் 300 வாழை மரங்கள் ஒடிந்து சேதமடைந்துள்ளது பெய்த கன மழையில், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலில் உள்ள தண்ணீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளது.

இதேபோல், இப்பகுதியில் சமயநல்லூர், தோடனரி, கள்ளிகுடி, ஆகிய பகுதிகளில் சுமார் 100- ஏக்கரில் கோடையில் பயிரிட்ட நெற்பயிர்கள் இந்த கனமழையால் பெருத்த சேதமடைந்துள்ளன. அரசு உரிய நிவாரண வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் .

ஏற்கெனவே, ஊரடங்கு உத்தரவால், வாழை இலை வாழை காய் வாழை பழங்கள் விற்பனை இல்லாமல் மரத்தில் வாழைப் பழங்கள் பழுத்து அழுகியதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பலத்த காற்று வீசியதால் மீதமிருந்த வாழை மரங்களில் இருந்த வாழை தார்களும் சேதமடைந்துள்ளது.

இதற்கு முன்னர் ஏற்பட்ட பாதிப்பிற்கும் அரசு நிவாரணம் வழங்கவில்லை என்றும், தற்போது ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!