மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி குடிநீரில் கழிவு நீர் கலப்பா?

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி குடிநீரில் கழிவு நீர் கலப்பா?
X

நிறம் மாறியுள்ள குடிநீர்.

குடிநீர் தண்ணீரில் சாக்கடைத் தண்ணீர் கலப்பா? குமுறும் மக்கள்

வாடிப்பட்டி:

சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டது சோழவந்தான். 18 வார்டுகளை கொண்ட இந்த பேரூராட்சியின் மொத்த ஜனத்தொகை 30 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இங்கு வசிக்கும் மக்களுக்கு வைகை ஆற்றில் குடிநீர் கிணறு 1974-75களில் அமைக்கப்பட்டு அதிலிருந்து தற்பொழுது வரை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது முதல் மேல்நிலை தொட்டி ஆகும் பின்பு இங்கு இரு மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டு விரிவாக்க பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. நகரின் மையப்பகுதிக்கு என முதலில் அமைக்கப்பட்ட வடிகட்டி கிணறு இருந்து விட்ட நிலையில் ஆற்றில் வரும் நீரை நேரடியாக உறிஞ்சி தான் தற்பொழுது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது பாதுகாக்கப்பட்ட சுத்தமான சுகாதாரமான குடிநீர் இல்லை. ஏனெனில் கிட்டத்தட்ட 45 இடங்களில் கழிவுநீர் கால்வாயில் வரும் கழிவுநீர் நேரடியாக வைகையாற்றில் கலக்கப்படுகிறது. எனவே, தண்ணீர் துர்நாற்றம் வீசுவதுடன் தேவையற்ற கழிவுகளுடன் வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குறிப்பாக பேரூராட்சி நிர்வாகம் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்களை அமைத்து அதில் வரும் கழிவுநீரை நேரடியாக வடிகட்டி விடுவதுதான் கொடுமையான விஷயம்.

இந்த நிலையை மாற்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்க வேண்டும். எனில் புதிதாக கிணறு அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கான திட்டம் தீட்டி அனுமதி பெற்று திட்டம் நடைமுறைக்கு வருவதற்குள் சோழவந்தான் பகுதி மிகப்பெரிய நோய் மையமாக மாறி விடும் அவலம் உள்ளது. இந்த நிலையை தவிர்த்து குறைந்த செலவில் சோழவந்தான் பேரூராட்சி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வாய்ப்பு உள்ளது.

மதுரை மாநகராட்சி1,2,3,வது கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தென்கரை கிராமம் நிலையூர் கால்வாய் பாலத்தின் அருகே முதல்கட்ட திட்டத்திலேயே சோழவந்தான் தண்ணீர் கொடுப்பதற்கு என குழாய் அமைத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, புதியதாக நிதி ஒதுக்கீடு செய்து திட்டம் செயல்படுத்த தேவையில்லாமல் நீட்டிக்கப்பட்டுள்ள குழாயில் இணைப்பை ஏற்படுத்தி குறைந்த செலவில் சுகாதாரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை சோழவந்தான் கிராம மக்களுக்கு வழங்க முடியும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என சோழவந்தான் பேரூராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil