மதுரை மாவட்டம் ,பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளியில், ஆண்டு விழா!

மதுரை மாவட்டம் ,பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளியில், ஆண்டு விழா!
X

பாலமேடு பத்திரகாளியம்மன் பள்ளியில், ஆண்டு விழா.

மதுரை மாவட்டம் ,பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளியில், ஆண்டு விழா நடைபெற்றது.

மதுரை அருகே பாலமேட்டில் பள்ளியின் ஆண்டுவிழா

மதுரை மாவட்டம், பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் 35-வது ஆண்டு விளையாட்டு விழா, டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி மாளிகை முன்பாக நடந்தது. உறவின்முறை சங்கத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.

மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர் சிவாஜி, சங்க பிரதிநிதி வைரமணி, பள்ளி முதல்வர் ரதி பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தார். பள்ளி தலைவர் கரிகாலன் வரவேற்றார். துணை காவல் கண்காணிப்பாளர் கலை கதிரவன், மாவட்ட சிலம்பக் கழக செயலாளர் மணி ஆகியோர் சிறப்பு விருந்திராக கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

முன்னதாக , மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மெட்ரிக் பள்ளி உறுப்பினர் மாணிக்கவேல் ராஜன் நன்றி கூறினார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!