மதுரை அருகே இளம்பெண் தீக்குளித்து மரணம்

மதுரை அருகே இளம்பெண் தீக்குளித்து மரணம்
X

பைல் படம்

குடும்பத்தகராறு காரணமாக தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு

அலங்காநல்லூர் அருகே தீக்குளித்த பெண் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் அருகே தண்டலை செவக்காட்டில், தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது: மதுரை மாவட்டம், தண்டலை, செவக்காட்டை சேர்ந்தவர் சித்ரா( 33) . இவர், வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக தீக்குளித்தாராம். ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்