பாலமேட்டில் பாரதிய ஜனதா கட்சி அலங்காநல்லூர் வடக்கு மண்டல செயற்குழுக் கூட்டம்

பாலமேட்டில் பாரதிய ஜனதா கட்சி அலங்காநல்லூர் வடக்கு மண்டல செயற்குழுக் கூட்டம்
X

பாலமேட்டில் பாஜக செயற்குழு கூட்டம்.

பாலமேடு பகுதியில் கிராவல் மண்களால் மாசு ஏற்படுவதை தடுக்க வேண்டும், சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுரை மாவட்டம் , பாலமேட்டில், பாரதிய ஜனதா கட்சி அலங்காநல்லூர் வடக்கு மண்டல் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு, அரசு தொடர்பு துறை மாவட்டத் தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். மண்டல் தலைவர் தங்கதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மண்டல் பொது செயலாளர்கள் நாகராஜா, குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மண்டல பொருளாளர் கண்ணன் வரவேற்றார். இந்த கூட்டத்தில், இப்பகுதியில் நீர்ப்பிடிப்பு பகுதியான, சாத்தியார் அணைக்கு நிரந்தரமாக தண்ணீர் கொண்டு வந்து தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நவோதேயா பள்ளி இப் பகுதியில் அமைக்கப்பட வேண்டும், பாலமேடு பகுதியில் கிராவல் மண்களால் மாசு ஏற்படுவதை தடுக்க வேண்டும், சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!