மதுரை அருகே அலங்காநல்லூரில் அரிமா சங்க ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை, தனியார் பள்ளி வளாகத்தில் அரிமா சங்க ஆலோசனை கூட்டம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை, தனியார் பள்ளி வளாகத்தில் அரிமா சங்க ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் தங்கராஜ், நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க, முன்னாள் தலைவர் நடராஜன், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலத் தலைவர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர், சங்கத்தின் புதிய தலைவராக ஜெயராமன், செயலாளராக முரளிதரன், பொருளாளராக கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். வட்டாரத் தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu