வாடிப்பட்டியில் அண்ணா பிறந்த நாள்: அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் அண்ணாசிலைக்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்களுடன் மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
மதுரை புறநகர் மாவட்டம் சார்பாக, வாடிப்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பாக உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளரும் திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாணவர்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என்று தவறான வாக்குறுதி கொடுத்து, மாணவர்களின் மரணங்கள் தொடர திமுக தான் முழு காரணம் என்றார் ஆர்.பி.உதயகுமார்.
இதில், வடக்கு ஒன்றியச் செயலாளர் காளிதாஸ், வாடிப்பட்டி நகரச் செயலாளர் ராஜேஷ் கண்ணா , முன்னாள் எம்.எல்.ஏ .கருப்பையா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu