திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், தடுப்பூசி முகாம்

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மதுரை மேலக்கால் சுகாதார மையமும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தியது

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மதுரை மேலக்கால் சுகாதார மையமும் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முகாமை கல்லூரி முதல்வர் தி. வெங்கடேசன் துவக்கி வைத்தார். மேலக்கால் சுகாதார மைய மருத்துவர் ஹேமலதா, சுகாதார அலுவலர் விஜய், செவிலியர் மலர், அழகு பாண்டி மருத்துவ முகாமில் பணியாற்றினர். செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரசேகரன் மற்றும் காமாட்சி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சீனிமுருகன், பிரேம் ஆனந்த், மோகன்ராஜ், அசோக் குமார், தினகரன், மாரிமுத்து, ஆகியோர் முகாம் பணியினை கவனித்தனர். ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், குடும்பத்தினர், மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!