கொரோனா 3 வது அலை: சோழவந்தான் காவல் நிலையத்தில் முன்னெச்சரிக்கை கூட்டம்
கொரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை விழிப்புணர்வு கூட்டம்
கொரோனா 3-வது அலை விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான கூட்டம், சோழவந்தான் காவல் நிலையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்றத் தலைவர்கள் தென்கரை மஞ்சுளா ஐயப்பன், முள்ளிப்பள்ளம் பழனிவேல், மன்னாடிமங்கலம் பவுன் முருகன், காடுபட்டி ஆனந்தன் மேலக்கால் முருகேஸ்வரி வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வரவேற்றார்.
3-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வாண்டையார், ரபீக் முகமது, தனிப்பிரிவு போலீசார் இருளப்பன், ஆகியோர் பேசினார்கள்.
இதில், கலந்து கொண்ட ஹோட்டல் காபி டீ உரிமையாளர் சங்க நிர்வாகி பிடிஆர் பாண்டி, வர்த்தகர் சங்க நிர்வாகி, மளிகை கடை சங்க நிர்வாகி சரவணகுமார், நகைக் கடை உரிமையாளர் சங்க நிர்வாகி இருளப்பன் என்ற ராஜா, அடகு கடை உரிமையாளர் சங்க நிர்வாகி காளியப்பன், ஜெராக்ஸ் கடை உரிமையாளர் சங்க நிர்வாகி மணிகண்டன், மருந்து கடை நிர்வாகிகள் கண்ணன், கருத்தப்பாண்டி, ராஜா ஈஸ்வரன், சிவா குமார், செந்தில் பாலா, ஜவுளிக்கடை உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ஜெகன், குணசேகரன் உட்பட பல்வேறு வியாபார அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தலைமை காவலர் சுந்தரபாண்டி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu