உரிமம் புதுப்பிப்பதை எளிமையாக்க தமிழ்நாடு பைனான்சியர் கூட்டமைப்பினர் கோரிக்கை

உரிமம் புதுப்பிப்பதை எளிமையாக்க தமிழ்நாடு பைனான்சியர் கூட்டமைப்பினர் கோரிக்கை
X
இந்தக்கோரிக்கை தொடர்பாக , மாநில வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து மனு அளிக்கவுள்ளனர்

உரிமம் புதுப்பிப்பதில் உள்ள நடைமுறைகளை எளிமையாக்க வேண்டுமென தமிழ்நாடு பைனான்சியர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தானில், மாநில தலைவர் நாச்சியப்பன் தலைமையில் நடைபெற்ற, தமிழ்நாடு பைனான்சியர் பெடரேஷன் சங்க ஆலோசனை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிற தீர்மானங்கள்: கொரோனா பேரிடரால் நலிவடைந்து வரும் பைனான்ஸ் தொழிலை மீட்டெடுப்பதற்குத் தேவையான சீரமைப்பு நடவடிக்கைகள் எடுப்பது. லைசென்ஸ் புதுப்பித்தல் தொடர்பான விதிகளை எளிமையாக்க வேண்டும். இந்தக்கோரிக்கை தொடர்பாக விரைவில் , மாநில வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது. மூன்றாண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் நடைமுறையை இணைய தளம் மூலம் செய்வதை, பழைய முறைக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, செயலாளர் விஜயரங்கன், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் உதவி தலைவர்கள் பழம்பதி, முத்தையா, இணைச் செயலாளர் சென்ன கேசவன், செல்வம், காளீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரிடமும், சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து கொரோனாவுக்கு எதிராக விழிப்புணர்வுடன் போராட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!