அடிப்படை வசதிகள் இல்லாத சோழவந்தான் தாற்காலிக பஸ்நிலையம்
அடிப்படை வசதி இல்லாத சோழவந்தான் தாற்காலிக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம், சோழவந்தானில் அடிப்படை வசதி இல்லாமல் செயல்படும் தற்காலிக பஸ் நிலையதில் பயணிகள் சிரமப்படும் நிலை தொடர்கிறது.
சோழவந்தானில், ஏற்கெனவே, இருந்த பஸ் நிலையம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் திறக்கப்படவில்லை. தற்போது, சோழவந்தானில் இயக்கப்பட கூடிய அனைத்து பேருந்துகளும் பயணிகளை ஏற்றி இறக்கி விடுவதற்கான இடவசதி ஒதுக்கப்படவில்லை. இதனால், ரயில்வே பீடர் ரோட்டில் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. பஸ்சுக்காக காத்து இருக்க கூடியவர்களுக்கு போதுமான அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை.
இதனால், பயணிகள் வெயிலிலும், மழையிலும் ஒதுங்க கூட இடமில்லாமல் சிரமப்படுகின்றனர். பயணிகளுக்கு தற்காலிக நிழற்குடை குடிநீர் வசதி சிறுநீர் கழிப்பதற்கு வசதி இப்படி அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. தற்காலிக பஸ் நிலையம் அமைக்காததால், வரக்கூடிய பஸ் எங்கு நிற்கிறது என்று தெரியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். ஆகையால், அரசு உரிய நடவடிக்கை எடுத்து புதிய பஸ் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu