அலங்காநல்லூரில் பேரூராட்சி சார்பில் தூய்மைப் பணி முகாம்

அலங்காநல்லூரில் பேரூராட்சி சார்பில்  தூய்மைப் பணி  முகாம்
X

மதுரை அருகே, அலங்காநல்லூரில் தூய்மைப் பணி முகாம்:

வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ள மாபெரும் தூய்மைப்பணி இயக்கம் நடைபெற்றது

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதியில், மாபெரும் தூய்மை பணி முகாம் நடைபெற்றது.

எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் இடற்பாடுகளை தவிர்க்கும் நோக்கில் தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.இதையடுத்து, கூடுதல் அரசு முதன்மை செயலா மற்றும் நகராட்சி நிர்வாகம். குடிநீர் வழங்கல் துறை, மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி உதவி இயக்குனர் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் தூய்மைப்பணி முகாம் நடைபெற்றது.

அதன்தொடர்ச்சியாக, மதுரைமாவட்டம், அலங்காநல்லூர், முனியாண்டி கோவில் அருகில் துாய்மை பணி முகாம் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் , நகர திமுக செயலாளர் ராஜேந்திரன்,- கோவிந்தராஜ், ஜெயராமன் அகியோர் முன்னிலையில் துவங்கியது.இதில், இளநிலை உதவி பொறியாளர் முத்துகுமார். இளநிலை உதவியார் பிச்சைமுத்து மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து பணிகளை மேற்கொண்டனர்.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!