அலங்காநல்லூர் அருகே திமுகவில் இணைந்த அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர்

அலங்காநல்லூர் அருகே திமுகவில் இணைந்த அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர்
X
திமுகவில் இணைந்த அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினருக்கு அமைச்சர் மூர்த்தி சால்வை அணிவித்து வரவேற்றார்

திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலருக்கு அமைச்சர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றிய 7-ஆவது வார்டு கவுன்சிலர் வடுகப்பட்டி தங்கம்மாள், இவர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் கென்னடி கண்ணன், பரந்தாமன்,மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், கூட்டுறவு சங்கத்தலைவர் முத்தையன். ஆகியோர் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தங்கம்மாளுக்கு, அமைச்சர் மூர்த்தி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அலங்காநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக கவுன்சிலர்கள் எண்ணிக்கை ஐந்தில் இருந்து தற்போது 4 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!