மன்னாடிமங்கலத்தில் கோவிட்- 19 தடுப்பூசி முகாம்

மன்னாடிமங்கலத்தில் கோவிட்- 19 தடுப்பூசி முகாம்
X

மன்னாடிமங்கலத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்.

மதுரை அருகே மன்னாடி மங்கலத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்க்கு மன்னாடிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பவுன் முருகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாக்கியம், ஊராட்சி செயலர் திருச்செந்தில், மன்ற வார்டு உறுப்பினர்கள், மன்னாடிமங்கலம் அப்துல் கலாம் அறிவியல் நற்பணி மன்ற சரவணன், விவசாயிமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மன்னாடிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அருண்கோபி தலைமையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரானா தடுப்பூசியை செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் செலுத்தினர். இதில் சுகாதார மேற்பார்வையாளர் முனியசாமி, ராதாகிருஷ்ணன் செவிலியர் டார்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!