திமுக மாணவரணி சார்பாக கபசுர குடிநீர் உணவு வழங்கப்பட்டது

திமுக மாணவரணி சார்பாக கபசுர குடிநீர் உணவு வழங்கப்பட்டது
X
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக மாணவரணி சார்பாக கபசுர குடிநீர் உணவு பொட்டலம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக மாணவரணி சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில், வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆணைக்கிணங்க, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஏ. வெங்கடேசன் அவர்களின் ஆலோசனையின் பேரில் தான் சோழவந்தான் பேரூர் திமுக மாணவரணி சார்பாக கபசுரக் குடிநீர் ,உணவு பொட்டலம் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சோழவந்தான் பேரூர் திமுக செயலாளர் முனியாண்டி தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், முன்னாள் துணைச் சேர்மன் அண்ணாதுரை, சேர்மன் ஐயப்பன் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பெரியசாமி, தவமணி, செல்லப்பாண்டி, முத்துவேல் ,எஸ் ஆர் சரவணன், ஆண்டியப்பன், சுரேஷ் ஐயப்பன், ஜெயராமன், முருகன் ,சசிகலா சக்கரவர்த்தி, கண்ணன், சந்திரன், ரவி, சேவியர் தொழிற்சங்கம், தர்மா ,கேபிள் நாகராஜ், மகேஸ்வரன், ராமநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!