அலங்காநல்லூர் அருகே குரங்குகளை கூண்டு வைத்த பிடித்த வனத்துறையினர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லுாரில் வனத்துறையினரிடம் பிடிபட்ட குரங்குகள்.
அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து மீண்டும் வனத்திற்குள் கொண்டு சென்று விட்டனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே வாவிடமருதூர் ஊராட்சியில் 6 மாதங்களுக்கு மேலாக 20க்கும் மேற்பட்ட குரங்குகள் தினந்தோறும் காலையும், மாலையும் ஊருக்குள் புகுந்து பெரியோர்கள் மற்றும் சிறுவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தன. வீடுகளுக்குள் புகுந்து உள்ளே இருக்கும் உணவுப் பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு அட்டகாசம் செய்து வந்தது. யாராவது விரட்டினால் அவர்களை கடிக்க ஆக்ரோஷமாக பாய்ந்து துரத்தி வந்தது. இப்படி தினந்தோறும், ஊருக்குள் புகுந்து சேட்டை செய்யும் இந்த குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதுகுறித்து, கிராம மக்கள் பலரும் ஊராட்சி மன்றத் தலைவரிடம் முறையிட்டனர். வாவிடமருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருநாவுக்கரசு இதுகுறித்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அங்குள்ள முல்லை பெரியாறு பாசன ஆற்றங்கரையில் உள்ள புளிய மரத்தில் சுற்றி திரியும் இந்த குரங்குகளை பிடிக்க வனத்துறை ஊழியர்கள் இரண்டு கூண்டுகளை வாழை பழம், பொரி கடலை உள்ளிட்ட உணவு பொருட்களுடன் வைத்தனர்.இதை தின்பதற்காக மரத்தில் இருந்து இறங்கிய குரங்குகள் கூண்டுக்குள் வசமாக மாட்டிக் கொண்டன. இந்த குரங்களை வனத்துறையினர் எடுத்துச் சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu