அலங்காநல்லூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சைக்கிள் பேரணி

அலங்காநல்லூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சைக்கிள் பேரணி
X
பெட்ரோல் விலை உயர்வு எதிர்த்து காங்கிரஸ் சைக்கிள் பேரணி

அலங்காநல்லூரில் பெட்ரோல்,டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல், கேஸ், விலை உயர்வை கண்டித்தும், அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்தும், அங்குள்ள ஐயப்பன் கோவிலில் இருந்து பேருந்து நிலையம் வரை சைக்கிள் பேரணி நடைபெற்றது.

காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பேரணியை, வடக்கு மாவட்ட மேலிட பொறுப்பாளர் வழக்குரைஞர் தமிழ்ச்செல்வன், தொடங்கி வைத்தார். வடக்கு, தெற்கு வட்டாரத் தலைவர்கள் சுப்பாராயலு, காந்தி, மனித உரிமை மாவட்ட தலைவர் ஜெயமணி, மாவட்ட பொருளாளர் நூர் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் வட்டாரத் தலைவர் மலைக்கனி,மனித உரிமை வட்டாரத் தலைவர் சரந்தாங்கி முத்து, ஓபிசி பிரிவு முருகன், பாண்டியராஜன், வட்டாரத் தலைவர்கள் குருநாதன், செந்தில்குமார், மாநில துணைத் தலைவர் முருகானந்தம், மாவட்ட துணைத் தலைவர் செல்வகுமார்,

வழக்குரைஞர் தமிழ்,பழனிவேல், முத்துப்பாண்டி, மூக்கையா,சிவராமலிங்கம், பொன் கார்த்திக், சௌந்தரபாண்டியன், இளைஞர் காங்கிரஸ் தீபக்,கௌதம், முரளி, மாவட்ட துணைத் தலைவர் தர்மராஜன், மலைராஜன், பெரிய கண்ணுச்சாமி, கரிகாலன்,சமயநல்லூர் வட்டாரத் தலைவர் செந்தில்குமார் ள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
future ai robot technology