அலங்காநல்லூரில் பிராணயாம மூச்சுப் பயிற்சி முகாம்

அலங்காநல்லூரில் பிராணயாம மூச்சுப் பயிற்சி முகாம்
X

அலங்காநல்லூரில் பிராணயாம மூச்சுப் பயிற்சி முகாம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிராணயாம மூச்சுப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை, தனியார் மஹாலில் பிராணயாம மூச்சுப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு, கல்லணை ஒன்றிய கவுன்சிலர் சுப்பாராயலு தலைமை தாங்கினார்.

எம்.எஸ். அறக்கட்டளைத் தலைவர் முருகன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின் யோகா பயிற்சிகளை வழங்கினார்.

இந்த மூச்சுப் பயிற்சி முகாமில் நாடிசுத்தி, பஸ்திரிகா, பிரம்மரி, குளிர்ச்சி பிராணயாமம், சாந்தி ஆசனம், சிரிப்பு பயிற்சிகள் உள்ளிட்ட அழுத்தம்,சோர்வு, பயம், தலைவலி, பசியின்மை, தூக்கமின்மை, ஆகியவற்றை போக்க கூடிய பிராணயாம மூச்சுப் பயிற்சிகள் கற்று தரப்பட்டது.

இதில், அப்பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!