சோழவந்தான் காரியாபட்டி பகுதிகளில் அரசு பஸ்கள் இயக்கம்: தொ.மு.சங்கம் அறிவிப்பு

மதுரை மாவட்டம் ,சோழவந்தான் அரசு போக்குவதற்கு பணிமனையில் இருந்து செல்லும் அரசு பஸ்கள்.
Maduari Area Govt Buses Ran
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை இன்று தொடங்கியுள்ள நிலையில்,மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்த அளவு பேருந்துகள் இயக்குவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
Maduari Area Govt Buses Ran
காரியாபட்டி பஸ் நிலையத்தில் இருந்து, புறப்பட்டு செல்லும் அரசு பஸ்கள்.
இந்த நிலையில், சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் மொத்தமுள்ள 53 பேருந்துகளில் 38 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் ,தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், மாற்று ஏற்பாடாக ஓய்வு பெற்ற தொழிலாளர் முன்னேற்ற சங்க பணியாளர்களை கொண்டும் தற்காலிக ஓட்டுனர்களை கொண்டும் பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் சிரமங்களை குறைத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அரசு டவுன் பஸ்கள் வழக்கம் போல இயங்கின. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், இன்று காலை அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள 18 அரசு டவுன் பேருந்துகள் வழக்கம் போல ஆறு மணிக்கு அனைத்து கிராமங்களுக்கும் இயக்கப்பட்டது. மேலும், காரியாபட்டியில் இருந்து கோவில்பட்டி மற்றும் திருச்சி செல்லும் இரண்டு நெடுந்தூர பேருந்தும் இயக்கப்பட்டது. மேலும், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு பதிலாக தற்காலிக பணியாளர்கள் தயாராக வைத்திருப்பதாக கிளை மேலாளர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu