சோழவந்தானில் அமமுக சார்பில் கடன் உதவி வழங்கும் விழா

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக எம்ஜிஆரின் 105- ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டது.
எம் ஜி ஆர், 105-வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை புறநகர் வடக்கு அமமுக மாவட்ட மீனவர் அணி சார்பாக, சோழவந்தானில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது. மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மேலூர் சரவணன் ஆலோசனையின் பேரில், சுயதொழில் செய்யும் பெண்களுக்கு கரவை பசுமாடு வாங்குதல் தையல் எந்திரம் வாங்குதல் உள்ளிட்ட சிறு தொழில்களுக்கான சுமார் 5 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன.
மீனவர் அணி மாவட்ட செயலாளர் முனைவர் பாலு ஏற்பாட்டில், சோழவந்தானில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜன், சோழவந்தான் பேரூர் செயலாளர் சத்யபிரகாஷ், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் மதன், இளைஞரணி மாவட்ட ச் செயலாளர் வீரமாரி பாண்டியன் நிர்வாகிகள் பாண்டியன் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். கடன் உதவி பெற்றவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu