சோழவந்தான் அருகே திரைப்பட நடிகர் டி.ஆர். மகாலிங்கம் நூற்றாண்டு விழா..!
திரைப்பட நடிகர் டி ஆர் மகாலிங்கத்தின் பேரன் ராஜேஷ்.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரையில் டி.ஆர்.மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா ஜூன் 16ல் கொண்டாடப்பட உள்ளது .
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையை சேர்ந்தவர் டி.ஆர்.மகாலிங்கம் இவர் ஜூன் 16ஆம் தேதி 1924-ல் பிறந்து 1978ஆம் ஆண்டுவரை வாழ்ந்தவர். இவர் இயல் இசை நாடக துறையில் கலைமாமணி விருது பெற்றவர். பல்வேறு படங்களில் பாடல், தயாரிப்பாளராகவும், நடிகராகவும், இசையமைப்பாளராகவும் விளங்கியவர்.
1940 - 1950களில் பிரபலமாக இருந்தவர் தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் டி.ஆர்.மகாலிங்கம். உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற இவர் நடித்த காதல் மற்றும் பக்திப்பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன.
39 படங்களில் நடத்த இவர் தனது 5 வயது முதல் நாடக மேடை ஏறி தனது பாடல் மூலம் பல்வேறு புகழடைந்தார். இவரது மேடை நாடக பாடலின் மெய்சிலிர்த்த ஏவி மெய்யப்பச் செட்டியார் டி.ஆர்.மகாலிங்கத்திற்கு 13-வது வயதில் பட வாய்ப்பு வழங்கினார். அதன் பிறகு, திரைத்துறையில், பல்வேறு சாதனைகள் புரிந்தார்.
முன்னாள் முதல்வர்கள் காமராஜர், கலைஞர், எம்ஜிஆர் ஆகியோருடன் நன்கு இணக்கமாக இருந்தவர். 1962-ல் சோழவந்தானில் வீடு கட்டி வாழ்ந்து வந்தவர். தற்போது அவருடைய நூறாவது பிறந்த நாள் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், அவரது நூற்றாண்டை கொண்டாடும் விதமாக, அவர் திரைத்துறையில் பங்காற்றி சாதனை புரிந்த விருதுகள் புகைப்படங்கள் ஆகியவற்றை அவர் வாழ்ந்து மறைந்த அவரது வீட்டில் படங்களாக சேகரித்து அவரது பேரன் ராஜேஷ் மகாலிங்கம் கண்காட்சிக்கு வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சி ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் மதுரை சோழவந்தான் பகுதியில் உள்ள தென்கரையில் அவர் வாழ்ந்து மறைந்த டி ஆர் மகாலிங்கத்தின் வீட்டில் கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. அதில், திரைப்படத் துறையைச் சார்ந்த பல்வேறு கலைஞர்கள் வருகை தர உள்ளனர். மேலும், அவரது திருவுருவ சிலை திறப்பு விழா நடைபெற்று கண்காட்சிக்கு வைக்கப்படும் என, அவரது பேரன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu