சோழவந்தான் அருகே நாகதீர்த்தத்தில் சட்ட உதவி முகாம்

சோழவந்தான் அருகே நாகதீர்த்தத்தில் சட்ட உதவி முகாம்
X

சோழவந்தான் அருகே நாகதீர்த்த்தில்  நடைபெற்ற தேசிய மனநலம் குன்றியோர் சட்ட உதவி வாரவிழா

வட்ட சட்ட ப் பணிகள் குழுத் தலைவர் நீதிபதி. ராம கணேசன் மனநலம் பாதித்தோருக்கு உணவு வழங்கினார்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள நாகர் தீர்த்தம் அட்சயா டிரஸ்டில், தேசிய மனநலம் குன்றியோர் சட்ட உதவி வாரவிழா நடைபெற்றது.

அட்சயா டிரஸ்ட் நிறுவனர் நாராயணன் கிருஷ்ணன் முன்னிலையில் நடந்த நிகழ்வில், வட்ட சட்ட ப் பணிகள் குழுத் தலைவர் நீதிபதி. ராம கணேசன் மனநலம் பாதித்தோருக்கு உணவு வழங்கினார். இதில், வட்ட சட்டப் பணிகள் குழு பழனிச்சாமி, உழவன் உணவகம் பொறுப்பாளர் சேது ,வட்ட சட்டப் பணிகள் குழு தன்னார்வலர் சண்முகவள்ளி, வழக்கறிஞர்கள் முத்துமணி, சந்திரமோகன், முத்துப்பாண்டி, ஜெயக்குமார், கலைவாணி, சேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business