மதுரை அருகே வழக்கறிஞர்கள் சாலை மறியல்

மதுரை அருகே வழக்கறிஞர்கள் சாலை மறியல்
X

வாடிப்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.

வழக்கறிஞர்களை தாக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது

வாடிப்பட்டியில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வாடிப்பட்டி வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குருவித்துறை ஹரிச்சந்திரன், கச்சைகட்டி குரு ஆகியோர் மீது தாக்குதல் நடந்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் மறியலுடன் கூடிய ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தலைவர் முத்துமணி தலைமை வகித்தார். செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வைத்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்கள் செல்வகுமார், முத்துராமலிங்கம், ராமசாமி, தங்கப்பாண்டி, கார்த்திக், வெள்ளைச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். தகவலறிந்த வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!