நிலம் கையகப்படுத்தும்போது முன்னறிவிப்பு செய்ய வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
அலங்காநல்லூர் அருகே செங்கல் காளவாசல்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டி மேய்கிபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு கலையரங்க மைதானம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கான விரிவாக்க சாலைகள் அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.அவ்வாறு கையக படுத்தப்படும் விவசாய நிலங்கள் மற்றும் தொழில் செய்யக்கூடிய இடங்கள் செங்கல் காளவாசல் உள்ளிட்டஇடங்களை சாலை அமைக்க
அரசு கையகப்படுத்தி வருகிறது. இதற்காக முறையான முன்னறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்றும் கையகப்படுத்தப்படும் இடத்திற்கான நில மதிப்பையும் அகற்றுவதற்கான கால அவகாசம் தரப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி பூமி என்பவர் கூறியதாவது. எங்களுக்கு சொந்தமான செங்கல் காளவாசல் மேய்க்கிபட்டியில் உள்ளது. இந்த இடத்தில் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு செல்லக்கூடிய விரிவாக்க சாலை செல்வதால் சாலை அமைக்க தேவையான இடத்தை அரசு கையகப்படுத்தி அத்துமால் செய்துள்ளது.
அதற்கான நில மதிப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இரவில் இந்த பகுதியில் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் முன்னறிவிப்பின்றி தங்களது செங்கல் சூளையின் மேற்கூறையை பிரித்து விட்டதாக கூறி அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் பூமி புகார் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரினை அடுத்து அலங்காநல்லூர் காவல் நிலைய போலீஸார் நேரில் சென்று விசாரித்ததில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் உடனடியாக கையகப்படுத்தும் இடத்திற்கான நில மதிப்பீட்டு சான்று வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதனை அடுத்து சாலை அமைக்கும் பணிக்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் சாலை அமைக்கும் இடத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு அரசு அறிவித்துள்ள நிலமதிப்பு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu