களத்தில் இறங்கி துப்புரவு பணி மேற்கொண்ட ஆய்வாளருக்கு குவிந்த பாராட்டு

களத்தில் இறங்கி துப்புரவு பணி மேற்கொண்ட ஆய்வாளருக்கு குவிந்த பாராட்டு
X

புகையில்லா பொங்கல் நிகழ்ச்சியில் பணியாளர்களை எதிர்பார்க்காமல் களத்தில் இறங்கி தூய்மை பணி செய்த துப்புரவு ஆய்வாளர்

சோழவந்தான் பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் நிகழ்ச்சி பேரூராட்சி 18 வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது

புகையில்லா பொங்கல் நிகழ்ச்சியில் பணியாளர்களை எதிர்பார்க்காமல் களத்தில் இறங்கி தூய்மை பணி செய்த துப்புரவு ஆய்வாளருக்கு அனைத்துத்தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பொதுமக்கள் போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள் தேவையற்ற கழிவுகளான டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களை தீட்டு எரித்து போகி பண்டிகை கொண்டாடி வருவதால் அதிகப்படியான நச்சுப் புகை வெளியேறி காற்றில் கலந்து பொதுமக்களுக்கு சுவாச நோய்களான இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன இதனால் பொதுமக்களுக்கு புற்றுநோய் உண்டாகும் சூழ்நிலையும் உள்ளது. இந்த நச்சுக் காற்றாலும் கரி புகையினாலும் காற்று மாசுபட்டு நம் நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது.

நச்சுப் புகை கலந்த பனிமூட்டத்தால் சாலை போக்குவரத்திற்கு தடை ஏற்படுகின்றது. இது போன்ற செயல்கள் மூலம் காற்றை மாசுபடுவது சட்டப்படி குற்றமாகும் எனவே இதனை தடுக்கும் பொருட்டு சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் பொதுமக்களிடம் போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்காமலும், தெருவில் போடாமலும் பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடம் அளித்து பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு தந்து பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் மாசு இல்லாமல் கொண்டாட வேண்டும் என பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, புகையில்லா பொங்கல் நிகழ்ச்சி பேரூராட்சி 18 வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக, இந்த நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு கோவில் வளாகத்தை தூய்மை செய்யும் பணி தொடங்கியது.

இதில், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் வர காலதாமதம் ஆனதால், தூய்மை பணி கருவிகளை எடுத்துக்கொண்டு துப்புரவு ஆய்வாளர் தானே களத்தில் இறங்கி தூய்மை பணியை மேற்கொண்டார். அப்போது, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை பெரிதும் பாராட்டி சென்றனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை