மதுரை மாவட்டம் ,அலங்காநல்லூரில் அறிவு சார் மையம் திறப்பு!

மதுரை மாவட்டம் ,அலங்காநல்லூரில் அறிவு சார் மையம் திறப்பு!
X

மதுரை மாவட்டம் ,அலங்காநல்லூரில் அறிவு சார் மையம் திறப்பு.

மதுரை மாவட்டம் ,அலங்காநல்லூரில் அறிவு சார் மையம் திறக்கப்பட்டது.

அலங்காநல்லூர் பேரூராட்சியில் ஒரு கோடியே 49 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அலங்காநல்லூர்.ஜன.06-

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூபாய் ஒரு கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது .இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் அங்குள்ள அறிவு சார் மையத்தில் நடைபெற்றது.பேரூராட்சி செயல் அலுவலர் ஜுலான்பானு

துணைத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி குத்து விளக்கு ஏற்றினார். பின்னர் அலங்காநல்லூர் அரசு பள்ளி மாணவ ,மாணவிகள்

அறிவுசார் மையத்தில் உள்ள புத்தகங்கள் விளையாட்டு உபகரணங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு அங்குள்ள புத்தகங்களை படித்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதி மாணவ மாணவிகள் தங்களது தனித்திறமை வளர்த்துக் கொள்வதற்கும் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்காகவும் மிகப்பிரமாண்ட ஒரு அறிவு சார் மையம் அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதியில் அமையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ஆசிரியர்களுக்கு உதவியாக மொபைல் செயலி: வேலை சுமையை குறைக்க புதிய முயற்சி..!