பாலமேடு பத்ரகாளியம்மன் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
பாலமேட்டில் நடந்த விழாவில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பாலமேட்டில் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியபட்ட பத்திரகாளியம்மன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி மாளிகை முன்பாக, காமராஜ் பிறந்த நாள் விழா நடந்தது. இதையொட்டி, அங்குள்ள காமராஜர் முழு உருவ சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பள்ளியின் தலைவர் அருணாச்சல வேல் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சிவாஜி, செயலாளர் மயில் வாகனன், மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் கணேசன், செயலாளர் சுரேஷ், பொருளாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, அங்குள்ள கலை அரங்கத்தில் நடனம், பேச்சுப்போட்டி, கவிதை, வில்லுப்பாட்டு, பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பரிசுகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்பட்டது. மேலும், அலங்காநல்லூர், பாலமேடு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக வடக்கு மாவட்டத் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் வட்டாரத் தலைவர் காந்தி, நகர் தலைவர் வைரமணி, துணைத் தலைவர் சந்திரசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயமணி, மனித உரிமை பிரிவு மாவட்டத் தலைவர் சரந்தாங்கி முத்து, ஓ பி சி பிரிவு மாவட்ட தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் மாவட்டத் தலைவர் பார்த்திபன் தலைமையில் மாவட்டச் செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதே போல பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu