மதுரை அருகே சோழவந்தானில், திமுக சார்பில் காமராஜர் பிறந்த தினம்...!
மதுரை அருகே சோழவந்தானில், காமராசர் பிறந்த தினம்
சோழவந்தான்.
முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சோழவந்தானில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு,
திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது . வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன் மாறன், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ் .கே. ஜெயராமன், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில்,பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் கொத்தாலம், செந்தில், செல்வராணி, ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி, அவைத்தலைவர் தீர்த்தம் முன்னால் பேரூராட்சி தலைவர் ஐயப்பன்,வார்டு கவுன்சிலர்கள் குருசாமி,நிஷா கௌதம ராஜா, முத்துலட்சுமி, சதீஷ் சிவா நிர்வாகிகள் மில்லர், சங்கங்கோட்டை ரவி, சந்திரன், நூலகர் ஆறுமுகம், மற்றும் சோழவந்தான் பேரூர் கழக வார்டு நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
காமராஜர் தமிழத்தில் தலைசிறந்த முதலமைச்சராக இருந்தவர். மக்கள் நலத்திட்டங்களை அவரைப்போல எந்த முதல்வரும் முன்னெடுக்கவில்லை. அவரது காலகட்டத்தில் பல்வேறு துறைகளும் வளர்ந்தன. கல்வி, விவசாயம் மற்றும் தொழிற்துறை என பல துறைகளுக்கும் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தினார். இன்றும் அவரைப்பற்றி நாடு பேசிக்கொண்டிருக்கிறது. மக்கள் போற்றும் மாபெரும் தலைவராக இருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu