சோழவந்தான் பேட்டை வீரகாளியம்மன் ஆலய மாசி பெருவிழா

சோழவந்தான் பேட்டை வீரகாளியம்மன் ஆலய மாசி பெருவிழா
X

சோழவந்தான் பேட்டை வீரமாகாளியம்மன் மாசி.திருவிழா பால்குட வைபவத்தில் பங்கேற்ற  பக்தர்கள்.

சோழவந்தான் பேட்டை வீரகாளியம்மன் ஆலய மாசி மாத திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம் சோழவந்தான், பேட்டை கிராமம் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் மாசிப் பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. விழா கடந்த 8 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 13-ஆம் தேதி கிராம பொங்கல் வைத்தல் பூத்தட்டு விழா நடைபெற்றது. நேற்று இரவு, மதுரை செல்லூர் கலைவாணி குழுவினரின் அம்மன் பக்தி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இன்று காலை, வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை வைகை ஆற்றிலிருந்து அக்னிச்சட்டி எடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. நாளை புதன்கிழமை மாலை முளைப்பாரி எடுக்கும் வைபவமும் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.

வருகிற 17ஆம் தேதி காலை, அன்னதானம், மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. அன்று இரவு மாவிளக்கு எடுத்தல் பங்குனி 4ம் தேதி காலை சிறப்பு அபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பேட்டை கிராமத்தினர் வருகின்றனர்.

Tags

Next Story