சோழவந்தான் பகுதி செய்திகள்: மின்னொளி கபடி போட்டி - எம்.எல்.ஏ பரிசு வழங்கினார்..!

சோழவந்தான் பகுதி செய்திகள்:  மின்னொளி கபடி போட்டி - எம்.எல்.ஏ பரிசு வழங்கினார்..!
X

சோழவந்தானில், கபாடி போட்டியை, தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.

சோழவந்தான் பகுதி இன்றைய செய்திகள் என்னென்ன தெரியுமா? படிங்க.

சோழவந்தானில் பாஜக சார்பில் பாரத தேச பிரிவினை தினம் அனுசரிப்பு

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தானில் பாஜக சார்பில், பாரத தேச பிரிவினை தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் கோசா பெருமாள் வரவேற்புரை ஆற்றினார்.

மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முத்துராமன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சீனிவாசன், சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் நன்றியுரை ஆற்றினார்.

மண்டல் பொதுச் செயலாளர் அருண் பாண்டியன் மண்டல் பொருளாளர் ராஜ்குமார் நிகழ்ச்சிக்கான பணிகளை, செய்தனர் இதில் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மாநில மாவட்ட பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சோழவந்தானில் மின்னொளி கபடி போட்டி

சோழவந்தான் :

மதுரை புறநகர் திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி சோழவந்தான், பேரூர் இளைஞர் அணி சார்பாக, சோழவந்தானில் இரண்டு நாட்கள் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இதில், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற அணியினருக்கு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பரிசுகள் வழங்கினார். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜி. பி. ராஜா தலைமை வகித்தார்.

இதில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், பேரூர் செயலாளர் சத்யபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் துணை செயலாளர்கள் ஸ்டாலின் கொத்தாலம் செந்தில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின் குருசாமி செல்வராணி ஜெயராமச்சந்திரன் நிஷா கௌதம ராஜா, முத்துச்செல்வி சதீஷ், அவைத்தலைவர் தீர்த்தம் ராமன், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் வெற்றிச்செல்வன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பால் கண்ணன், பேரூர் இளைஞர் அணி செயலாளர் முட்டை கடை காளி, குருவித்துறை அலெக்ஸ், மில்லர், தவம், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சோழவந்தானில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தொடக்கம்

சோழவந்தான்:

சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான அளவிடும் பணி நேற்று தொடங்கியது. மார்க்கெட் ரோடு,வளையல்காரர் தெரு, திரௌபதி அம்மன் கோவில் வடக்குதெரு, கடைவீதி ஆகிய பகுதிகளில், ஆக்கிரமிப்பு அகற்றும் அளவிடும் பணி நடந்தது.

இதில், பேரூராட்சி செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசின், வாடிப்பட்டி தாலுகா சர்வேயர் ஆண்டவர்,கிராமநிர்வாக அலுவலர்கள் சோழவந்தான் கமலக்கண்ணன் சோலைக்குறிச்சி காளீஸ்வரி மற்றும் பேரூராட்சி,வருவாய் துறை பணியாளர்கள் அளவிடும் பணியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!