சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், கோயில் திருவிழா..!
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா.
சோழவந்தான் ஜூன் 17
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகம் முன்பாக ராட்சத பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. கோவில் வளாகம் முழுவதும், பந்தல் முகப்பு, மற்றும் பல்வேறு இடங்களில் சோழவந்தான் எம் வி எம் குடும்பத்தார் சார்பாக குழும தலைவர் எம் .மணி முத்தையா, நகர அரிமா சங்க தலைவர், எம் பி எம் கலைவாணி பள்ளி தாளாளர், டாக்டர். எம். மருது பாண்டியன், எம் வி எம் கலைவாணி பள்ளி நிர்வாகி எம் வள்ளி மயில் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் மின்னொளி அமைக்கப்பட்டு கோவில் வளாகம் முழுவதும் இரவிலும் பகல் போல் ஜொலித்து வருகிறது.
இதனால் பொதுமக்கள், பக்தர்கள் சிரமமின்றி திருக்கோவில் வந்து தங்களது வழிபாட்டினை செய்து வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் மற்றும் அக்னி சட்டி திங்கள் இரவு 12 .01 முதல் நடைபெறும். புதன்கிழமை மாலை மந்தை களத்தில் பூக்குழி வைபவம் நடைபெறுகிறது. கடந்த திங்கட்கிழமை பக்தர்கள் கொடியேற்றம் நடைபெற்றவுடன் காப்பு கட்டுதலுடன் துவங்கி விரதமிருந்து வருகின்றனர்.
வைகை ஆற்றில் குளித்துவிட்டு தினமும் காலையும் மாலையும் அம்மனை தரிசித்து வருகின்றனர். தமிழகத்தில் நடைபெறும் அம்மன் கோவில்களில் 17 நாட்கள் திருவிழா நடைபெறும் முக்கியத்துவம் பெற்ற திருக்கோவிலில். அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் . அம்மன் தினமும் இரவு ரிஷபம் ,சிம்மம் ,யாழி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நான்கு ரத வீதிகளில் வலம் வருவது வழக்கம்.
தொடர்ந்து திருக்கோவில் முன்பாக இரவு கலை நிகழ்ச்சிகளும், பட்டிமன்றம் நடைபெற்று வருகிறது. திருவிழா காலங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார். எதிர்வரும் 25ஆம் தேதி தேரோட்டமும் அதனைத் தொடர்ந்து டாக்டர் எம். மருதுபாண்டியன் மற்றும் வட்ட பிள்ளையார் கோவில் நண்பர்கள் சார்பாக அன்னதானமும் நடைபெறுகிறது, 26 ஆம் தேதி வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.
விழாவை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சோழவந்தான் போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நகரில் ஆங்காங்கே சிசிடிவி கேமரா பொருத்தி தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று திங்கட்கிழமை சோழவந்தான் மதுரை செல்லும் வாகனங்கள் காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்படும், கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் செல்லும் வாகனங்கள், குருவித்துறை மன்னாடிமங்கலம் செல்லும் வாகனங்கள் ஊருக்கு வெளியே நிறுத்தி பக்தர்களுக்கு வசதி செய்து தரப்பட உள்ளது. சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் சுகாதாரப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu