சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், பால்குட திருவிழா..!
ஜெனகை மாரியம்மன் கோயில் பால்குட ஊர்வலம்.
சோழவந்தான்:
சோழவந்தான் ஜெனகைமாரியம்மன்கோவில் மிகவும் பிரசித்திபெற்றது.இக்கோவிலில் கடந்த 10 தேதி வைகாசிபெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது.இதில் இருந்து தினசரி அம்மன்புறப்பாடு நடைபெற்றது. இதில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பால்குடம் அக்னிச்சட்டி எடுக்கும் திருவிழா இன்று நடந்தது.இதில் பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பூஜை செய்து பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து அங்கிருந்து கோவில் முன்பு உள்ள மூன்றுமாத கொடிக்கம்பத்தைச் சுற்றி நான்கு ரத வீதி வலம் வந்து நேர்த்திகடனை செலுத்தினார்கள்.
இந்த விழா நேற்றுஇரவு முதல் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து வந்தனர்.நேர்த்திக் கடனுக்காக உருவபொம்மை,ஆயிரங்கண்பானை,21அக்னிச்சட்டி,கரும்புதொட்டில்குழந்தை எடுத்துவருதல், கரும்புள்ளி,செம்புள்ளிகுத்தி வருதல்,அழகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அண்டை மாநிலங்களில் இருந்தும் மற்றும் பலமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கான பேர்வருகை புரிந்து திருவிழாவை கண்டுகளித்து அம்மனை தரிசித்தனர்.
இவ்விழாவை முன்னிட்டு முத்துமுருகாஅறக்கட்டளை தலைவர் வக்கீல்சிவக்குமார் ஏற்பாட்டில்பக்தர்கள் வசதிக்காக அதி நவீனமின்ஒளியில் வைகைஆற்றில்மோட்டார்மூலம்தண்ணீர் எடுத்து பக்தர்கள் குளிப்பதற்கு பல இடங்களில் குழாய் வசதி செய்திருந்தனர்.இந்த வசதியை ஏற்படுத்தி இருந்த அறக்கட்டளை நிர்வாகத்தினரை பக்தர்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.அரசன்சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள்மாணவர் சங்கம்.உட்பட பல்வேறு அமைப்பில் இருந்து நீர்,மோர் வழங்கினார்கள்.
எம்விஎம் குழுமத் தலைவர் மணிமுத்தையா, வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமயில்,டாக்டர் மருதுபாண்டியன் மற்றும் முத்து குமரன் நகை மாளிகை இருளப்பன் ராஜா அன்னதானம் வழங்கினார்கள். இதே போல் பல இடங்களில் அன்னதானம் வழங்கினார்கள். சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், செயல் அலுவலர் செல்வகுமார்,சுகாதாரப் பணி ஆய்வாளர் சூரியகுமார்,துணைத்தலைவர் லதாகண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பணியாளர்கள் வைகைஆற்றை சுத்தம் செய்து கூடுதலாக மின்விளக்கு,குடிநீர்வசதி, கழிப்பறைவசதி செய்திருந்தனர்.
இதேபோல் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மற்றும் தென்கரை ஊராட்சி பகுதிகளில் பக்தர்கள் வசதிக்காக வைகை ஆற்றில் இறங்கும் பகுதியில் பாதைகள் அனைத்திலும் சுத்தம் செய்யப்பட்டு கூடுதலாக மின்விளக்கு வசதிகள் செய்திருந்தனர்.பக்தர்கள் செல்லக்கூடிய இடங்களில் டிராக்டரகளில் வாட்டர் டேங்க் அமைத்து ரோடுகளில் தண்ணீர் தெளித்து வெயில் தாக்கத்தை தனித்து பக்தர்களுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தினர்.
மாலை அம்மன் வைகை ஆற்றுக்கு சென்று அங்கு அபிஷேகம் நடைபெறும்.இரவு வைகை ஆற்றில் இருந்து பூப்பல்லக்கில் அம்மன் பவனி வந்து கோவிலை அடையும்.சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்தராஜ்,சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர்,என்சிசி மாணவர்கள்,சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் ஆகியோர் முகாம் அமைத்திருந்தனர்.
நேற்று எட்டாம் நாள் மண்டபம் முன்னிட்டு சோழவந்தான் நாடக நடிகர் சங்க கிராமிய கலைக்குழுவின் சார்பாக கிராமிய தெம்மாங்கு பாட்டு கச்சேரி நடந்தது சீனிவாச பிரபு தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம் கே முருகேசன் முன்னிலை வகித்தார். டி ஆர் மகாலிங்கம் பேரன் டி ஆர் எம் எஸ் ராஜேஷ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சோழவந்தான் நாடக நடிகர் சங்க கிராமிய கலை குழுவின் தலைவர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார்.
நாளை மாலை மந்தைகளம் மைதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செயல் அலுவலர் இளமதி தலைமையில் பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா பெருமாள் உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் பூஜைகள் செய்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu