மதுரை அருகே சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் பெருந்திருவிழா..!

மதுரை அருகே  சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் பெருந்திருவிழா..!
X

ஜெனக நாராயணப் பெருமாள் பங்குனி விழா, கொடியேற்றம்.

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றம் நடந்தது.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவில் 48 ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு, இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு கோவில் கொடியானது சோழவந்தானின் நான்கு முக்கிய விதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் மண்டபம் வந்தடைந்தது. பின்னர் ,காலை 10:30 மணி அளவில் கோவில் முன்பு கொடியேற்றப்பட்டது.


திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் திருக்கோளத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வருகின்ற 23. 4. 2024 அன்று நடைபெறும். அதனை தொடர்ந்து, 24.4.2024 புதன்கிழமை தசாவதார நிகழ்ச்சிகள், 25/4/2024 பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும், நடைபெறும். கொடியேற்ற நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு தலைவர் எஸ் .எஸ். ராஜாங்கம், சரக ஆய்வாளர் ஜெயலட்சுமி, செயல் அலுவலர் இளமதி, எழுத்தர் முரளி மற்றும் பெரியசாமி, எஸ். எம் .பாண்டியன் ஆண்டியப்பன், மங்கையர்கரசி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் பக்தர்கள் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story