சோழவந்தான் பேரூராட்சித் தலைவராக ஜெயராமன் போட்டியின்றி தேர்வு

சோழவந்தான் பேரூராட்சித் தலைவராக ஜெயராமன் போட்டியின்றி தேர்வு
X

ஜெயராமன்.

சோழவந்தான் பேரூராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் ஜெயராமன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் பதவி தேர்தல் இன்று காலை பேரூராட்சி வளாகத்தில் நடந்தது தேர்தல் அலுவலர் சுதர்சன் தேர்தலை நடத்தினார்.

இதில், சோழவந்தான் 11 வது திமுக வார்டு உறுப்பினர் ஜெயராமன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் . வேட்பு மனுத்தாக்கல் நேரம் முடியும் வரை வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால் ஜெயராமன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!