ஜெயலலிதா பல்கலை., இணைப்பு: அலங்காநல்லூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஜெயலலிதா பல்கலை., இணைப்பு: அலங்காநல்லூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

அலங்காநல்லூர் கேட்டு கடைபகுதில் நடைபெற்ற அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை, அண்ணாமலைக் பல்கலைக் கழகத்துடன் இணைக்கவுள்ளதைக் கண்டித்தும், சென்னையில் மறியலில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைதைக் கண்டித்தும் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டு கடைபகுதில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்தன் தலைமைதாங்கினார்.

இதில், நகரச் செயலாளர்கள் அழகுராசா ,குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், ஒன்றியக் கவுன்சிலர் ரேவதி, கூட்டுற சங்கத் தலைவர் பாலாஜி, அய்யூர் நடராசன், கேட்டு கடை ஆறுமுகம், கோட்டை மேடு ராஜாஜி, முடுவார்பட்டி மாணிக்கம், மேட்டுபட்டி மயில்வீரன், அய்யாவு. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!