/* */

சோழவந்தான், ஜெனக நாராயணப் பெருமாள் பெருந் திருவிழா : ஏற்பாடுகள் ஜரூர்..!

சோழவந்தான்,ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழா ஏப்ரல் 8ம் தேதி ஆரம்பம் ஏப்ரல் 15 ல் திருக்கல்யாணம் நடக்கிறது.

HIGHLIGHTS

சோழவந்தான், ஜெனக நாராயணப் பெருமாள் பெருந் திருவிழா : ஏற்பாடுகள் ஜரூர்..!
X

சோழவந்தான் ஜெனக நாராயணப்  பெருமாள் கோவில்.

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழா ஏப்ரல் 8ம் தேதி ஆரம்பம் ஏப்ரல் 15 ல் திருக்கல்யாணம் நடக்கிறது.

சோழவந்தான்:

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 48 ஆம் ஆண்டு திருவிழா வருகிற ஏப்ரல் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. 8ம் தேதி இரவு விஷ்வக்சேனர்புறப்பாடு நடைபெறும்.

9 ம் தேதி காலை கொடியேற்றம் நடந்து இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு இதிலிருந்து தினசரி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.15 ஆம் தேதி அன்று காலை 9:30 மணியளவில் திருக்கல்யாணம், அன்று இரவு வண்ண கோரகத்தில் சுவாமி விதி உலா நடைபெறுகிறது.

தினசரி மாலை சக்கராத்தாழ்வார் புறப்பாடு நடைபெறும். உபயதார்கள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.எஸ். ராஜாங்கம், அறங்காவலர்கள் ஆர். பெரியசாமி, எஸ்.எம். பாண்டியன், எஸ். ஆண்டியப்பன், ஜே. மங்கையர்கரசி மற்றும் கோவில் செயலாளர் சுதா, பணியாளர் முரளிதரன் ஆகியோர் திருவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Updated On: 4 April 2024 10:54 AM GMT

Related News