ஜல்லிக்கட்டு தீர்ப்பு: இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விலக்கப்பட்டதை வரவேற்று சோழவந்தானில் திமுகவினர் இனிப்பு வழங்கினர்.
ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ஜல்லிக்கட்டுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்குகளில், உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதையொட்டி, உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடும் வகையில் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பாக நேற்று ஜல்லிக்கட்டு விழா குழுவை சேர்ந்த ரகுபதி, கோவிந்தராஜ், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதிதங்கமணி மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து, ஜல்லிக்கட்டு விழா குழுவை சேர்ந்த ரகுபதி, கூறியதாவது: பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு காரணமாக ஜல்லிக்கட்டுக்கு தடை வந்து விடுமோ என்ற அச்சத்துடன் இருந்த தங்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேட்டில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். உச்ச உச்சநீதிமன்றத்தில் சீறிய வாதங்களை முன்வைத்து தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு மீட்டெடுக்க உதவிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஆகியோருக்கு, ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற உறுதுணையாக இருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளை வளர்ப்பவர்களுக்கும், ஜல்லிக்கட்டு விழா குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் அவர்.
சோழவந்தானில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்:
மதுரை மாவட்டம், சோழவந்தானில் பேரூர் திமுக சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியதை வரவேற்று திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஒன்றியச்செயலாளர் பசும்பொன் மாறன் இனிப்புகள் வழங்கினார்.
பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், ஒன்றிய நிர்வாகி நீலமேகம், பேரூர் நிர்வாகிகள் சங்கங்கோட்டை சந்திரன் இளைஞர் அணி முட்டை கடை காளி மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu